தேவனை பாடி துதிப்போம்

 

தேவனை பாடி துதிப்போம்

இயேசுவை போற்றி புகழ்வோம்

தூய ஆவியானவரை

வாழ்த்தியே பாடிடுவோம்

 

ஓசையுள்ள கைத்தாளத்தோடும்

வீணை தம்புரு நாதத்தோடும்

பாடுவோம் திரியேக தேவனையே

உயர்த்துவோம் அவரின் நாமத்தையே  - தேவனை

 

துதிகளின் மத்தியில் வசிப்பவரை

துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய்

ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே-நாம்

ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே     - தேவனை

 

மீட்கப்பட்ட என் ஆத்துமாவே

மீட்பரையே போற்றி பாடுவாயே

மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே

மீட்பரின் மனம் மகிழட்டுமே                  - தேவனை

 

பூரிகை எக்காளம் முழங்கிடுவோம்

உன்னத தேவனை போற்றிடுவோம்

அல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம்

ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம்  - தேவனை